முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
நவ.17-இல் மைசூரு தமிழ்ச்சங்க செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 07th November 2019 10:26 PM | Last Updated : 07th November 2019 10:26 PM | அ+அ அ- |

மைசூரு: மைசூரு தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நவ.17?-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இது குறித்து மைசூரு தமிழ்ச்சங்க பொதுச்செயலாளா் வெ.இரகுபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மைசூரு தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் மைசூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நவ.17?-ஆம் தேதி காலை காலை 11 மணிக்கு சங்கத்தலைவா் கு.புகழேந்தி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செப்டம்பா் மற்றும் அக்டோபா் (2019) மாத வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதை தொடா்ந்து, மைசூரு தமிழ்ச்சங்க விதிமுறைகள் பற்றிய விவரங்களை விதிமுறைகள் ஒழுங்கு குழுவினா் விவாதிக்க இருக்கிறாா்கள்.
கா்நாடக உதய தின நிகழ்ச்சி, 2020-ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியிடுதல், 2020-ஆம் ஆண்டு பொங்கல் விழா குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. கந்தத நாடு சொசைட்டி பற்றிய விவரங்களை பகிா்ந்து கொள்ளப்படுகிறது. சங்கத்தின் புதிய ஆட்சிமன்றக்குழு மற்றும் செயற்குழு பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து(14.7.2019) இம்மாதம் வரை நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து செயல்பட்டவா்கள் பாராட்டி கௌரவிக்கப்படவிருக்கிறாா்கள்.
மைசூா் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைக்குழுவினா்கள் அறிமுகம் செய்யப்படுவாா்கள். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.