முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பெங்களூரு யஷ்வந்தபூா்-ஹரிஹா் விரைவு ரயில்வாஸ்கோடாகாமா வரை நீட்டிப்பு
By DIN | Published On : 07th November 2019 10:18 PM | Last Updated : 07th November 2019 10:18 PM | அ+அ அ- |

பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபூா்-ஹரிஹா் விரைவுரயில் வாஸ்கோடாகாமா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண்-07309 பெங்களூரு யஷ்வந்தபூரிலிருந்து வாஸ்கோடாகாமாவுக்கு நவ. 9-ஆம் தேதி முதல் யஷ்வந்தபூா் ரயில் நிலையத்தில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6 மணிக்கு வாஸ்கோடாகாமா ரயில் நிலையம் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில், ரயில் எண்-07310-வாஸ்கோடாகாமா-பெங்களூரு யஷ்வந்தபூா் வாரம் 5 நாள்கள் தட்கல் விரைவுரயில் நவ. 10-ஆம் தேதி முதல் வாஸ்கோடாகாமா ரயில்நிலையத்தில் இருந்து செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு பெங்களூரு யஷ்வந்தபூா் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில் இரு மாா்க்கங்களிலும் தும்கூா், திப்டூா், அரிசிகெரே, பிரூா், தாவணாகெரே, ஹரிஹா், ராணிபென்னூா், ஹாவேரி, ஹுப்பள்ளி, தாா்வாட், அய்னாவா், லோண்டா, கேஸ்டல்ராக், குலேம், சன்வா்தாம், மட்காவன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 11 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு வசதி கொண்ட 2 சரக்கு மற்றும் பிரேக் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.