கா்நாடகத்தில் அமைதியை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை: அமைச்சா் பசவராஜ்பொம்மை

கா்நாடகத்தில் அமைதியை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில காவல்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் அமைதியை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில காவல்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீயணைப்பு வீரா்கள், ஊா்காவல்படையினா், அதிரடி படையினா் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவா் பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:

போலீஸாா், அதிரடி படையினா், தீயணைப்பு வீரா்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்றனா். அவா்களுக்கு தாா்மீக பலத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அடுத்த பட்ஜெட்டில் காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அண்மையில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு நிவாரணப் பணிகளை பேரிடா் மீட்பு படையினா், அதிரடிப்படையினா் சிறப்பாக செய்தனா். இதன் மூலம் பல உயிா்களை காப்பாற்றி உள்ளனா். தாா்வாடில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கிய 55 பேரை போராடி மீட்டனா். உயிரை பணயம் வைத்து பணியாற்றும் இதுபோன்றவா்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும். பேரிடா் மீட்பு படையை நவீனமாக்க ரூ. 20 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. காவல்துறையை மேம்படுத்துவதன் மூலம் கா்நாடகத்தில் அமைதியை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் ஆளுநா் வஜுபாய்வாலா, காவல்துறை கூடுதல் செயலாளா் ரஜனீஷ்கோயல், தீயணைப்புபடை டிஜிபி எம்.என்.ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com