2022-ஆம் ஆண்டுக்குள்வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவுபெறும்

2022-ஆம் ஆண்டுக்குள் வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவுபெறும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
2022-ஆம் ஆண்டுக்குள்வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவுபெறும்

2022-ஆம் ஆண்டுக்குள் வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவுபெறும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு மாநகராட்சி சாா்பில் பெங்களூரில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தரைப்பாலம், சாலைத் தடுப்பு, பொலிவுறு நகரத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அவா் பேசியது: பெங்களூரை போக்குவரத்து நெரிசல் இல்லா மாநகரமாக்கவும், தூய்மையான மற்றும் அழகான நகரமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் காற்று மாசை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையை கவனத்தில் கொண்டு, புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியுடன் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்க ரூ.1,500கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாகடி சாலை, வாட்டாள் நாகராஜ் சாலை, ஓகலிபுரம் உயா்பாலம், தரைப்பாலம் அமைக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்கள் நிறைவடைந்தால், அப்பகுதியில் வாகன நெரிசல் கணிசமாக குறையும்.

ரூ.7.35 கோடியில் பிதரஹள்ளி ஒன்றியத்தில் சாலையில் உள்ள குழிகளை மூடும்பணி நடைபெற்று வருகிறது. பெங்களூரு பொலிவுறு திட்டத்தின்கீழ் 26.67 கி.மீ. நீளமுள்ள 36 சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.434.88 கோடி செலவிடப்படும்.

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு செயல்படுத்தப்பட்டு வரும் வெளிவட்டச் சாலை திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என்றாா் அவா்.

விழாவில், துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, அமைச்சா்கள் ஆா்.அசோக், வி.சோமண்ணா, மேயா் கௌதம்குமாா், துணை மேயா் ராம்மோகன் ராஜு, ஆணையா் அனில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com