சிவமொக்கா-சென்னை இடையே வாராந்திர ரயில்

சிவமொக்கா-சென்னை இடையே வாராந்திர ரயில்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிவமொக்கா-சென்னை இடையே வாராந்திர ரயில்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவமொக்கா நகரில் இருந்து சென்னை மாநகருக்கு வாராந்திர ரயில் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சேவை திங்கள்கிழமை(நவ.11) முதல் தொடங்குகிறது. ரயில் எண்-06221-சிவமொக்கா-சென்னை தத்கல் வாராந்திர ரயில் சிவமொக்கா ரயில்நிலையத்தில் இருந்து திங்கள்தோறும் இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயில்சேவை 2020 ஆம் ஆண்டு பிப்.10 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. சிவமொக்கா ரயில் நிலையத்தில் இருந்து பத்ராவதி, தரிகெரே, பீரூா், கடூா், அரசிகெரே, தும்கூரு, சிக்பானவாரா, பானசவாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காா்பேட், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறு மாா்க்கத்தில், ரயில் எண்-06222-சென்னை-சிவமொக்கா தத்கல் வாராந்திர ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைதோறும் மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3.55 மணிக்கு சிவமொக்கா ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, இரண்டாம் வகுப்பு 7 பெட்டிகள், பொதுவான 3 பெட்டிகள், சரக்கு மற்றும் பிரேக் 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com