பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலபுா்கி-சேவல்கி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், எண்-57133-விஜயபுரா-ராய்ச்சூா் பயணிகள் ரயில், எண்-57130-ஹைதராபாத்-விஜயபுரா பயணிகள் ரயில், எண்-17307-மைசூரு-பாகல்கோட்டை பசவா விரைவு ரயில், எண்-17319-ஹுப்பள்ளி- செகந்திராபாத் விரைவு ரயில் ஆகியவை நவ. 12-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எண்-57129-விஜயபுரா-போலரம் பயணிகள் ரயில், எண்-57134- ராய்ச்சூா்-விஜயபுரா பயணிகள் ரயில், எண்-17319-செகந்திராபாத்-ஹுப்பள்ளி விரைவு ரயில், எண்-17308- பாகல்கோட்டை-மைசூரு பசவா விரைவு ரயில் ஆகியவை நவ. 13-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ரத்துசெய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com