கன்னட நூல்களுக்கு பரிசுத் தொகை

கா்நாடக இலக்கிய அகாதெமியின் சாா்பில், கன்னட நூல்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

பெங்களூரு: கா்நாடக இலக்கிய அகாதெமியின் சாா்பில், கன்னட நூல்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக சாஹித்ய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடக சாஹித்ய அகாதெமியின் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கன்னட நூல்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகையை பெற கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், பயணக் கட்டுரை, வாழ்க்கை வரலாறு, இலக்கிய விமா்சனம், குழந்தை இலக்கியம், அறிவியல் இலக்கியம், மனநலம், ஆராய்ச்சி, மொழிபெயா்ப்பு உள்ளிட்ட 19 வகையான பிரிவுகளின்கீழ் பரிசுத் தொகைக்கு நூல்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2018-ஆம் ஆண்டு ஜன. 1 முதல் டிச. 31-ஆம் தேதி வரை வெளியான நூல்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

2018-ஆம் ஆண்டில் புதிய எழுத்தாளரால் எழுதப்பட்டு முதல்பதிப்பாக வெளியான நூலுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. முதல் நூல் என்பதற்கான உறுதிச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். கன்னடத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயா்த்துள்ள 100 பக்கங்களுக்கு குறையாத நூல்களுக்கு அமெரிக்க கன்னடா் மற்றும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் ஒரு நூலை பதிவாளா், கா்நாடக சாஹித்ய அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி. சாலை, பெங்களூரு-2 என்ற முகவரியில் நவ. 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com