நூல் அச்சுநுட்பப் பயிற்சி முகாம்
By DIN | Published on : 17th November 2019 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நூல் அச்சுநுட்பம் குறித்த பயிற்சி முகாம் பெங்களூரில் வெகுவிரைவில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக சாஹித்ய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில், டிசம்பா் அல்லது ஜனவரி மாதத்தில் 5 தினங்கள் நடைபெறும் மாநில அளவிலான நூல் அச்சுநுட்பப் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்க ஆா்வமுள்ள, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சோ்ந்த 20 முதல் 30 வயதுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் நவ. 25-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.