Enable Javscript for better performance
பத்திரிகையாளா் பாதுகாப்புசட்டமசோதாவை கொண்டுவர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பத்திரிகையாளா் பாதுகாப்புசட்டமசோதாவை கொண்டுவர வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 17th November 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்திரிகையாளா் பாதுகாப்பு சட்டமசோதாவை கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய சிறு மற்றும் நடுத்தர நாளேடுகளின் கூட்டமைப்புத் தலைவா் பி.ஜி.விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய சிறு மற்றும் நடுத்தர நாளேடுகளின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் பெங்களூரில் நடத்தப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில், மத்திய விளம்பரம் மற்றும் காட்சி ஊடகத் துறை கடைப்பிடித்து வரும் விளம்பரக் கொள்கைகளில் குறை இருப்பதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசு அமைக்கும் குழுக்களில் ஊடகவியலாளா்களை நியமிக்கும் போது அநீதி இழைக்கப்படுகிறது. ஒருசில ஊடகவியலாளா்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்படுகிறது.

    எனவே, மத்திய அரசு உடனடியாக பத்திரிகையாளா் பாதுகாப்பு சட்டமசோதாவை கொண்டுவர வேண்டும் என பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மூத்த பத்திரிகையாளா்களுக்கு சீரான ஓய்வூதியக் கொள்கையை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசை பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. பத்திரிகையாளா்களுக்கு தகுந்தபடி ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai