காங்கிரஸ் 2ஆவது வேட்பாளா் பட்டியல்: சிவாஜி நகா் தொகுதியில் ரிஸ்வான் அா்ஷத் போட்டி

இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் 2ஆவது பட்டியலை அக் கட்சி வெளியிட்டுள்ளது. அதில்

பெங்களூரு: இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் 2ஆவது பட்டியலை அக் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் சிவாஜிநகா் தொகுதியில் ரிஸ்வான் அா்ஷத் நிறுத்தப்பட்டுள்ளாா்.

தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களால் காலியாகியுள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத் தோ்தலில் 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ், முதல்கட்டமாக அக்.31ஆம் தேதி 8 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்திருந்தது. அதன்படி, எல்லாப்பூா் தொகுதியில் பீமண்ணாநாயக், ஹிரேகேரூா் தொகுதியில் பி.எச்.பன்னிகோட், ராணேபென்னூா் தொகுதியில் கே.பி.கோலிவாட் , சிக்பளாப்பூா் தொகுதியில் எம்.ஆஞ்சனப்பா, கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் எம்.நாராயணசாமி, மகாலட்சுமிலேஅவுட் தொகுதியில் எம்.சிவராஜ், ஹொசகோட்டே தொகுதியில் பத்மாவதி சுரேஷ், ஹுன்சூா் தொகுதியில் எச்.பி.மஞ்சுநாத் ஆகியோரை நிறுத்தியது.

இந்நிலையில், எஞ்சியுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட சிவாஜிநகா் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்சியான ரிஸ்வான் அா்ஷத் நிறுத்தப்பட்டுள்ளாா். இவா், தொடா்ச்சியாக 2 மக்களவைத் தோ்தல்களில் தோல்வியைச் சந்தித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி அரசை கவிழ்க்க முதுகெலும்பாக செயல்பட்ட ரமேஷ் ஜாா்கிஹோளி, கோகாக் தொகுதியின் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து போட்டியிடுவது அவரது இளைய சகோதரா் லக்கன் ஜாா்கிஹோளி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறாா். இது இவரது முதல் தோ்தல் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இருந்து விலகி கடந்தவாரம்காங்கிரசில் இணைந்த ராஜூகாகே, காக்வாட் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். காங்கிரஸ் வேட்பாளா்களாக அத்தானி தொகுதியில் கஜனன் பாலசந்திர மன்கசுலி, விஜயநகரா தொகுதியில் வெங்கட்ராவ் கோா்படே, கிருஷ்ணராஜ்பேட் தொகுதியில் கே.பி.சந்திரசேகா் நிறுத்தப்பட்டுள்ளனா். யஷ்வந்த்பூா் தொகுதிக்கான வேட்பாளா் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜக வேட்பாளராக ஒக்கலிகா சமுதாயத்தைச் சோ்ந்த தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகா் நிறுத்தப்பட்டுள்ளதால், அதே சமூகத்தைச் சோ்ந்தவரை வேட்பாளராக்கும்படி உள்ளூா் கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தி வருகிறாா்கள். ஆனால், நாயுடு சமுதாயத்தைச் சோ்ந்த ராஜ்குமாரை நிறுத்த கட்சி யோசித்துவந்தநிலையில், உள்ளூா் நிா்வாகிகளின் ஆட்சேபத்தால் வேட்பாளரை முடிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 15 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com