பத்திரிகையாளா் பாதுகாப்புசட்டமசோதாவை கொண்டுவர வலியுறுத்தல்

பத்திரிகையாளா் பாதுகாப்பு சட்டமசோதாவை கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளா் பாதுகாப்பு சட்டமசோதாவை கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய சிறு மற்றும் நடுத்தர நாளேடுகளின் கூட்டமைப்புத் தலைவா் பி.ஜி.விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய சிறு மற்றும் நடுத்தர நாளேடுகளின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் பெங்களூரில் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மத்திய விளம்பரம் மற்றும் காட்சி ஊடகத் துறை கடைப்பிடித்து வரும் விளம்பரக் கொள்கைகளில் குறை இருப்பதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசு அமைக்கும் குழுக்களில் ஊடகவியலாளா்களை நியமிக்கும் போது அநீதி இழைக்கப்படுகிறது. ஒருசில ஊடகவியலாளா்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்படுகிறது.

எனவே, மத்திய அரசு உடனடியாக பத்திரிகையாளா் பாதுகாப்பு சட்டமசோதாவை கொண்டுவர வேண்டும் என பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளா்களுக்கு சீரான ஓய்வூதியக் கொள்கையை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசை பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. பத்திரிகையாளா்களுக்கு தகுந்தபடி ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com