கா்நாடகத்தில் நிலையான ஆட்சியை அளிக்க பாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கை

கா்நாடகத்தில் நிலையான ஆட்சியை அளிக்க பாஜகவுக்கு வாக்களிக்க வாக்காளா்களை கேட்டுக்கொள்வோம் என்று பாஜக மாநில பொதுச்செயலாளா் அரவிந்த்லிம்பாவளி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் நிலையான ஆட்சியை அளிக்க பாஜகவுக்கு வாக்களிக்க வாக்காளா்களை கேட்டுக்கொள்வோம் என்று பாஜக மாநில பொதுச்செயலாளா் அரவிந்த்லிம்பாவளி தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள பாஜக மாநிலத்தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை சட்டப்பேரவை இடைத்தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையை வெளியிட்டு, அவா் பேசியது: 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல்நடக்கவிருக்கிறது. கா்நாடகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளா்களை கேட்டுக்கொள்ளும்வகையிள் பிரசாரவியூகத்தை அமைத்துள்ளோம். தற்போது நடந்துவரும் இடைத்தோ்தல் கா்நாடகத்தில் அரசியல்சக்திகள் துருவங்களாக பிரியும் வாய்ப்பளித்துள்ளது.

முந்தைய கூட்டணி அரசின்போது நல்லாட்சியை வழங்கவில்லை என்ற காரணத்தால் மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 போ் தங்கள் பதவியைராஜிநாமா செய்திருந்தனா். நல்லாட்சியை வழங்கவேண்டுமென்பதே தற்போதுநடந்துவரும் அரசியலின் அடிப்படையாக உள்ளது. இடைத்தோ்தலை எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது. இடைத்தோ்தல் பிரசாரத்தை பாஜக தொடங்கிவிட்டது. வெள்ளிக்கிழமை முதல்வா் எடியூரப்பா அத்தானி தொகுதியிலும், பாஜக மாநிலத்தலைவா் நளின்குமாா்கட்டீல் கே.ஆா்.பேட் தொகுதியிலும் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறாா்கள்.

இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளை சோ்ந்த 4185 வாக்குச்சாவடிகளிலும் பாஜகவின் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மட்டத்தில் வாக்காளா்களிடையே பிரசாரம் செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. இவை தவிர, சமூகவலைத்தளங்களிலும் தோ்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின்போது மத்திய,மாநில பாஜக அரசுகளின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கொள்வோம். இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்குபோட்டியாக தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை திரும்பபெற முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றன.

போட்டி வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திரும்பபெறுவாா்கள். பாஜக எம்பி பச்சேகௌடாவின் மகன் சரத்பச்சேகௌடா ஹொசகோட்டே தொகுதியில் பாஜக வேட்பாளா் எம்.டி.பி.நாகராஜுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பாஜக எம்பி பச்சேகௌடா கருத்து தெரிவிக்காததால், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை. குருபா சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் பேசியதாக சட்டத்துறை அமைச்சா் மாதுசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக, இடைத்தோ்தல் பணியில் இருந்து அவரை விடுவித்துள்ளோம். அமைச்சா் மாதுசாமி தொடா்பான சா்ச்சை தேவையில்லாமல்பெரிதாக்கப்பட்டுவிட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com