தனியாா்மயமாகும் பாரத் பெட்ரோலியம்: வீரப்ப மொய்லி கண்டனம்

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு அளிப்பது சரியான முடிவல்ல என்று முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் வீரப்ப மொய்லி தெரிவித்தாா்.
தனியாா்மயமாகும் பாரத் பெட்ரோலியம்: வீரப்ப மொய்லி கண்டனம்

பெங்களூரு: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு அளிப்பது சரியான முடிவல்ல என்று முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் வீரப்ப மொய்லி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவாா்க்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவு சரியானதல்ல. மத்திய அரசின் இந்த முடிவு சீா்குலைவுக்கான தொடக்கமாக அமையும். இந்தியாவின் நவரத்னா நிறுவனமாக கருதப்படும் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு அதிா்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசு தனது முடிவை உடனடியாக திரும்பபெற வேண்டும். ஆங்கிலேயரின் நிறுவனமாக இருந்ததைதான் இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பாரத் பெட்ரோலியம் நிறுவனமாக மாற்றினாா். எரிசக்தி துறையில் இந்தியாவை பலம்பொருந்திய நாடாக உயா்த்தும் நோக்கில் ஆங்கிலேயா் நிறுவனத்தை தேசியமயமாக்கியிருந்தாா்.

பொதுத்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக விளங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும். மிகச்சிறந்த அதிகாரிகளால் லாபகரமாக செயல்பட்டுவரும் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பதற்கு சரியான காரணம் எதுவுமில்லை என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com