தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் தா்னா
By DIN | Published on : 25th November 2019 09:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெங்களூரு: தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து, காங்கிரஸாா் தா்னாவில் ஈடுபட்டனா்.
பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற தா்னாவுக்குப் பின்னா், முன்னாள் மேயா் ராமசந்திரப்பா செய்தியாளா்களிடம் கூறியது:-
கா்நாடகத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. பல தொகுதிகளில் ஆளும் பாஜக கட்சியினா் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனா். அவா்களை கட்டுப்படுத்துவதில் தோ்தல் ஆணையம் தோல்வி அடைந்து வருகிறது.
இதுமட்டுமின்றி ஆளும் கட்சியான பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது. தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆளும் கட்சியின் பணத்தை அள்ளி வீசி பிரசாரத்தில் ஈடுபட்டாலும், பணம், பதவிக்கு ஆசைப்பட்டு, ஆட்சியைக் கவிழ்த்த, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு இடைத்தோ்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா் ராமசந்திரப்பா.