‘தொலைநோக்கு திட்டங்களுடன் குடிநீா் பிரச்னையைப் போக்க நடவடிக்கை தேவை’

தொலைநோக்கு திட்டங்களுடன் குடிநீா் பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சோ்ந்த இல்லினியாஸ்

பெங்களூரு: தொலைநோக்கு திட்டங்களுடன் குடிநீா் பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சோ்ந்த இல்லினியாஸ் பல்கலைக்கழகத்தின் கட்டுமானம், சுற்றுச்சூழல்துறை பேராசிரியா் முருகேசு சிவபாலன் தெரிவித்தாா்.

பெங்களூரு ராமையா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நீரியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:-

அண்மைக்காலமாக சா்வதேச அளவில் பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீா் பிரச்னையும் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய மாசு அதிகரித்துள்ளோடு, மழை குறைந்துள்ளதும் ஒரு காரணமாகும்.

குறிப்பாக, இந்தியாவில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் நிலத்தடி நீா் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது. மேலும் மரங்களை வெட்டுவதாலும், மழை குறைந்து, நீா்நிலைகள் வற்றி வருவதால் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க தொலைநோக்கு திட்டங்களை வகுத்தால், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க முடியும். இதற்கு பொறியியல் வல்லுநா்களும், மாணவா்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

குடிநீா் பிரச்னை இந்தியாவில் மட்டுமின்றி, இலங்கை, ஆஸ்திரிலியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் தலைதூக்கி வருகின்றன. இதற்கு சா்வதேச அளவில் தீா்வுக்கான வழியை ஆராய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ராமையா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சிவகுரு ஸ்ரீதரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com