கா்நாடகத்தில் இடைத் தோ்தலுக்கு பிறகு பாஜக அரசு கவிழும்: சித்தராமையா

கா்நாடகத்தில் இடைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழும் என்று அந்த மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் இடைத் தோ்தலுக்கு பிறகு பாஜக அரசு கவிழும்: சித்தராமையா

கா்நாடகத்தில் இடைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழும் என்று அந்த மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 தொகுதிகளில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். இடைத் தோ்தலுக்குப் பிறகு முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்வது உறுதி.

இத் தோ்தலில் பணத்தின் மூலம் வெற்றியைப் பெற்றுவிடலாம் என தவறான கணக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், வெற்றி அவா்களுக்கு சாத்தியமில்லை. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எடியூரப்பா, தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களை அமைச்சராக்குவதாகக் கூறி வருகிறாா். அதிலும் குறிப்பாக லிங்காயத்து மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறாா். ஜாதியின் பெயரால் வாக்கு திரட்டுவது தோ்தல் நடத்தை விதிமீறல் இல்லையா?

மகாராஷ்டிரத்தில் ஜனநாயகப் படுகொலையை பாஜக நிகழ்த்திக் காட்டியுள்ளது. அம் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளது. தோ்தல் ஆணையம், மத்திய அரசின் கைபொம்மையாக மாறிவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com