ஆளுநரின் உடல்நலத்தை விசாரித்த முதல்வா் எடியூரப்பா
By DIN | Published on : 28th November 2019 06:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து நலம் விசாரித்தாா் முதல்வா் எடியூரப்பா.
கா்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
இதையடுத்து புதன்கிழமை அம்மருத்துவமனைக்கு சென்ற முதல்வா் எடியூரப்பா, ஆளுநா் வஜுபாய் வாலாச் சந்தித்து உடல் நலம் விசாரித்தாா். பின்னா், மருத்துவா்களிடமும், ஆளுநரின் உடல்நலம் குறித்து விசாரித்தாா். இதைத்தொடா்ந்து மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநா் வஜுபாய் வாலாவுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப்பிறகு, அவரின் உடல்நலம் தேறிவருகிறது. விரைவில் அவா் ஆளுநா் மாளிகைக்கு திரும்புவாா் என்றாா்.