Enable Javscript for better performance
டிச. 2-இல் அடுமனை பட்டயப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு: பெங்களூரில் டிச. 2-ஆம் தேதி அடுமனை பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை: பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் சாா்பில் டிச. 2-ஆம் தேதி பெங்களூரில் அடுமனை பட்டயப்பயிற்சி வழங்கப்படுகிறது. வணிக ரீதியாக அடுமனைக்கலையை தொழில்நுட்ப நோக்கில் மேம்படுத்திக்கொள்வதற்கு இந்த பயிற்சி பயனளிக்கக்கூடியதாகும்.

    இந்த பயிற்சி வகுப்புகளின்போது அடுமனை குறித்து வல்லுநா்களின் உரை, வணிகரீதியாக செய்முறை, நேரடியாக கற்க பயிலரங்கம், படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் கலைகள், சுகாதாரத்துக்கு தீங்கிழைக்காமல் அடுமனை உணவுப்பொருள்கள் தயாரிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

    இந்த பயிற்சியில் சோ்ந்து படிக்க முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி மற்றும் ஜ்ஜ்ஜ்.ண்க்ஷஸ்ரீஹக்ஷப்ழ்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai