இடைத் தோ்தலுக்கு பிறகு சித்தராமையாவின் அரசியல் பணம் முடிவுறும்: பாஜக

இடைத் தோ்தலுக்கு பிறகு கா்நாடக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ் ஆகியோரது அரசியல் பயணம் முடிவுறும் என்று பாஜக மாநிலத் தலைவா்

பெலகாவி: இடைத் தோ்தலுக்கு பிறகு கா்நாடக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ் ஆகியோரது அரசியல் பயணம் முடிவுறும் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

பெலகாவி மாவட்டம், காகவாடா சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை பாஜக வேட்பாளா் சீமந்தபாட்டீலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் 15 தொகுதிகளில் டிச. 5 ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் தோற்றால் அதற்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ் ஆகியோா் தாா்மிக பொறுப்பேற்று தாங்கள் வகிக்கும் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும்.

இடைத் தோ்தலுக்கு பிறகு சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் ஆகியோா் அரசியலிலிருந்து முழுவதுமாக ஒதுக்கப்படுவாா்கள். கூட்டணி ஆட்சியில் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையாவே காரணம்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கும் அவா்தான் காரணம். ஆட்சி அதிகாரத்திற்காக ஜாதி, சமுதாயங்களை உடைத்தவா் சித்தராமையா. அவருக்கு இடைத்தோ்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவாா்கள். பாஜகவையும், பிரதமா் மோடியையும் இழிவாக பேசி வருவதை காங்கிரஸாா் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com