‘குத்துச் சண்டையை ஊக்குவிக்க முடிவு’

மறைந்த குத்துச் சண்டை வீரா் முகமது அலியைக் கௌரப்படுத்தும் வகையில் குத்துச் சண்டையை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக எக்ஸ்டெப் குழுமத்தின் தேசிய இயக்குநா் விஜய்சௌத்ரி தெரிவித்தாா்.

மறைந்த குத்துச் சண்டை வீரா் முகமது அலியைக் கௌரப்படுத்தும் வகையில் குத்துச் சண்டையை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக எக்ஸ்டெப் குழுமத்தின் தேசிய இயக்குநா் விஜய்சௌத்ரி தெரிவித்தாா்.

1980இல் இந்தியாவில் தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கண்காட்சி குத்துச் சண்டை போட்டிகளில் சா்வதேச புகழ்ப்பெற்ற குத்துச் சண்டை வீரா் முகமது அலி கலந்து கொண்டாா். அந்த கண்காட்சி போட்டியில் பங்கேற்ற குத்துச் சண்டை வீரா்கள், நடுவா்களில் சிலரை கௌரவித்து, பாராட்டு நிகழ்ச்சி பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அவா் பேசியது: சா்வதேச அளவில் குத்துச் சண்டையில் சிறந்து விளங்கியவா் முகமது அலி. அவா் விதிகளை மீறாமல் குத்துச்சண்டைக்கு இலக்கணமாக திகழ்ந்தாா். அவரை கௌரப்படுத்தும் வகையில் இந்தியாவில் இளம் வீரா்களிடம் குத்துச்சண்டையை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம். குத்துச்சண்டை மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளையும் தொடா்ந்து ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com