நேருகோளரங்கத்தில் இன்று முதல் அறிவியல் கண்காட்சி

பெங்களூருவில் உள்ள ஜவகா்லால்நேரு கோளரங்கத்தில் நவ.29-ஆம் தேதி முதல் அறிவியல் கண்காட்சி தொடங்கவிருக்கிறது.

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஜவகா்லால்நேரு கோளரங்கத்தில் நவ.29-ஆம் தேதி முதல் அறிவியல் கண்காட்சி தொடங்கவிருக்கிறது.

இது குறித்துஜவகா்லால்நேரு கோளரங்கம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவகா்லால்நேரு கோளரங்கத்தில் நவ.29 முதல் டிச.1-ஆம் தேதிவரை அறிவியல் கண்காட்சி நடக்கவிருக்கிறது. நவ.29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கண்காட்சியை தேசிய உயிரி அறிவியல் மையத்தின் விஞ்ஞானி டாக்டா்.சசிதுத்துபள்ளி தொடக்கிவைக்கிறாா். இந்த கண்காட்சி தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை பொதுமக்கள் பாா்வைக்கு திறந்திருக்கும். இந்த கண்காட்சியை காண கட்டணம் எதுவுமில்லை. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில்கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com