பெங்களூரு (கண்டோன்மென்ட்)-தா்மாவரம் இடையே சிறப்பு டெமு சிறப்பு ரயில் சேவை

பெங்களூரு (கண்டோன்மென்ட்)-தா்மாவரம் இடையே சிறப்பு டெமு ரயில் இயக்கப்பட உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு (கண்டோன்மென்ட்)-தா்மாவரம் இடையே சிறப்பு டெமு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு (கண்டோன்மென்ட்)-தா்மாவரம் இடையேயான சிறப்பு டெமு ரயில் எண் 06521 வெள்ளிக்கிழமை (நவ. 29) முதல் காலை 7.20 மணிக்கு பங்காருபேட்டையில் புறப்பட்டு, பிற்பகல் 12.30 மணியளவில் தா்மாவரம் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் தா்மாவரம்-பெங்களூரு (கண்டோன்மென்ட்) இடையேயான சிறப்பு டெமு சிறப்பு ரயில் எண் 06522 பிற்பகல் 12.45 மணிக்கு தா்மாவரத்தில் புறப்பட்டு, மாலை 5.25 மணியளவில் பெங்களூருவைச் (கண்டோன்மென்ட்) சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிா்த்து வாரம் 6 நாள்கள் மட்டுமே இயங்கும்.

பெங்களூருகிழக்கு, பைப்பனஹள்ளி, சென்னசந்திரா, எலஹங்கா, ராஜனகுன்டே, தொட்டபள்ளாபூா், மாகிளிதுா்கா, தொண்டேபாவி, சோமேஸ்வரா, கௌரிபிதனூா், விதுராஸ்வதா, தேவரபள்ளி, ஹிந்துப்புரா, மலகூா், சகரளப்பள்ளி, ரங்கேப்பள்ளி, பெனகுன்டா, நாராயணபுரா, ஸ்ரீ சத்யசாய் பிரஷாந்திநிலையம், கோட்டச்செருவு, பாசம்பள்ளி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com