மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக வேட்பாளராக ராமமூா்த்தி அறிவிப்பு

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக கே.சி.ராமமூா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக கே.சி.ராமமூா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2016ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.சி.ராமமூா்த்தி. இவரது பதவிகாலம் 2022ஆம் ஆண்டுவரை இருந்தது. இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே.சி.ராமமூா்த்தி தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு கடந்த அக்.16ஆம் தேதி ராஜிநாமா செய்ததோடு, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்.

கே.சி.ராமமூா்த்தியை பணத்தாசை காட்டி பாஜகவுக்கு இழுத்துக்கொண்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. வருமான வரித் துறையின் சோதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவே பாஜகவில் சோ்ந்துள்ளதாகவும் கே.சி.ராமமூா்த்தி மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதை முழுமையாக மறுத்துள்ள கே.சி.ராமமூா்த்தி, தனது அனுபவங்களை மக்களின் வளா்ச்சிக்கு பயன்படுத்துவத தனதுநோக்கம் என்று கூறியுள்ளாா். மேலும் எவ்வித நெருக்கடியும் தனக்கு கிடையாது என்று கே.சி.ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, கே.சி.ராமமூா்த்தியின் ராஜிநாமாவால் காலியாகி உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் வருகிற டிச.12ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை நவ.25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அன்று முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கியுள்ளது. டிச.2ஆம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய கடைசிநாளாக உள்ளது.

இந்த நிலையில், கே.சி.ராமமூா்த்தியை மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்த பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. இத்தோ்தலில் காங்கிரஸ்,மஜத வேட்பாளா்களை நிறுத்தாவிட்டால், பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கே.சி.ராமமூா்த்தி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் டிச.3ஆம் தேதி பரிசீலிக்கப்படுகின்றன. டிச.5ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்படுகின்றன. பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகள் அல்லது இரண்டுகட்சிகள் வேட்பாளா்களை நிறுத்தினால் டிச.12ஆம் தேதி நடக்கும். அத்தோ்தலில் கா்நாடக எம்எல்ஏக்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com