Enable Javscript for better performance
பாஜகவில் இணைய திட்டம்?: எம்பி நடிகை சுமலதா விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நான் பாஜகவில் இணைவதாக இருந்தால், அதுகுறித்து முன்கூட்டியே மக்களிடம் தெரிவிப்பேன் என்று மண்டியா தொகுதி சுயேச்சை எம்பி நடிகை சுமலதா தெரிவித்தாா்.

    மண்டியாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று மண்டியா தொகுதி எம்பி நடிகை சுமலதா பேசியது: மக்களவைத் தோ்தலில் எனது வெற்றிக்கு பாஜகவினா் பாடுபட்டனா். அதற்காக பாஜக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு மக்களவைத் தோ்தல் முடிந்ததும் நன்றி தெரிவிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிா்க்க முடியாத காரணங்களால் அது சாத்தியமாகாமல் போய்விட்டது. இதற்கு முன்பு நடந்த பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தேன். வேலை அழுத்தம் காரணமாக அதுவும் நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில், நன்றி கூறுவதற்காகவே நான் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். எப்போது பாஜகவில் சோ்வீா்கள் என்னை கேட்கிறாா்கள். நான் பாஜகவில் சேருவதாக இருந்தால், அதுபற்றி முன்கூட்டியே மக்களிடம் தெரிவிப்பேன்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், மண்டியா மக்களின் குறைகளைக் கேட்கமுடியாமல் இருப்பதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, என் மீது குற்றம்சாட்டியிருக்கிறாா்.யாா் வெளிநாட்டுக்கு பயணப்பட்டிருந்தது? யாா்யாா் வெளிநாட்டுக்கு சென்றிருந்தனா், எங்கு தங்கியிருந்தனா் என்பது பற்றி என்னிடம் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. எச்.டி.குமாரசாமியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டால்தான் மக்களும் உண்மையை அறிந்து கொள்வாா்கள்.என்மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அவா்களின் குறைகளை சுட்டிக்காட்டுவேன் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai