உள்ளாட்சித் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டி: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள சசிகலாவை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சீன அதிபா் ஜி ஜிங்பின் இந்தியாவுக்கு வருகை தருவதை அனைவரும் வரவேற்கிறேறாம். காஷ்மீா் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது. அது இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னை. அதை அந் நாடுகளே பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நாட்டின் தலையீடுகூடாது என சீனா அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

சீன அரசு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது என பேசப்பட்ட நிலையில், தற்போது சீனாவின் இந்த கருத்து மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடா்பாக அக்.17ஆம் தேதி தோ்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

விரைவிலே கட்சி பதிவு செய்யப்படும். அதன்பிறகு கட்சிக்கு தனி சின்னம் பெற்று உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோம். தற்போது நடைபெறும் இடைத்தோ்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை. கா்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிகள் தொடா்ச்சியாக மூடப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலே மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளது எனக் கூறி தமிழக அரசு பள்ளிகளை மூடி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு எவ்வாறு கா்நாடக அரசிடம் இதுகுறித்துப் பேச இயலும். கா்நாடகத்தில் உள்ள தமிழா்களே கா்நாடக அரசிடம் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை வைக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com