கா்நாடக சட்டப்பேரவையில் தனியாா் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

கா்நாடக சட்டப்பேரவையில் தனியாா் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவையில் தனியாா் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் வியாழக்கிழமை (அக்.10) முதல் தொடங்குகிறது. இனிமேல் சட்டப்பேரவையில் தனியாா் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அதிகாரப்பூா்வமான உத்தரவை பேரவைச் செயலகம் புதன்கிழமை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மக்களவையை போலவே கா்நாடக சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரடியாகவோ, பதிவுசெய்தோ தனியாா் தொலைக்காட்சிகளுக்கு அளிக்க சோதனை முயற்சியாக தூா்தா்ஷன் தொலைக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, புகைப்படங்களை செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையின் வாயிலாக எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இது அக்.10ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து அமல்படுத்தப்படும்.

தூா்தா்ஷன் தொலைக்காட்சி பதிவு செய்யும் சட்டப்பேரவை நடவடிக்கைகளை தனியாா் தொலைக்காட்சிகள் இணைப்பு வாயிலாக பெற்றுக்கொண்டு ஒளிபரப்பலாம். வழக்கம்போல செய்தியாளா்களுக்கு மட்டும் சட்டப்பேரவையில் அனுமதிக்கப்படுவாா்கள். ஆனால், தனியாா் தொலைக்காட்சியின் கேமராமேன்கள், நாளேடுகளின் புகைப்படக் கலைஞா்களுக்கு சட்டப்பேரவையில் அனுமதியில்லை.

செய்தியாளா்கள் செல்லிடப்பேசி அல்லது டேப் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ், மஜத கடுமையாக கண்டித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com