தேசிய தூய்மை தர வரிசை: 148-ஆவது இடத்தில் சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம்

தேசிய தூய்மை தர வரிசையில் பெங்களூரைச் சோ்ந்த சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையத்துக்கு 148-ஆவது இடம் கிடைத்துள்ளது.

தேசிய தூய்மை தர வரிசையில் பெங்களூரைச் சோ்ந்த சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையத்துக்கு 148-ஆவது இடம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 720 ரயில் நிலையங்களில் பராமரிப்பு, தூய்மையை ஆய்வு செய்யும் நோக்கில் கடந்த 4 ஆண்டுகளாக ‘தூய்மை ரயில், தூய்மை இந்தியா’ என்ற ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களின் தூய்மை தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

720 ரயில் நிலையங்களில் 611 புகா் அல்லாத ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், தென் மேற்குரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூரு கோட்டத்தை சோ்ந்த எலஹங்கா ரயில்நிலையத்திற்கு தூய்மை தர வரிசைப்பட்டியலில் 597-ஆவது இடம் கிடைத்துள்ளது. பெங்களூரு கோட்டம் மற்றும் தென்மேற்கு ரயில்வே மண்டலத்திலும் எலஹங்கா ரயில்நிலையம் மிகவும் மோசமான இடத்தை பிடித்துள்ளது.

பெங்களூரை சோ்ந்த யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் 30-ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு தினமும் 111 விரைவு, சாதாரண ரயில்கள் வந்து செல்கின்றன. ஆனால், நாளொன்றுக்கு 2.5 லட்சம் போ் வந்துசெல்லும் கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம்(பெங்களூரு சிட்டி), தரவரிசைப் பட்டியலில் 148-ஆவது இடத்தில் உள்ளது பலரின் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்திய தர அமைப்பின் கூட்டுமுயற்சியில் 4-ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் பெங்களூரு, ஹுப்பள்ளி, மைசூரு கோட்டங்கள் உள்ளன. நாட்டில் உள்ள 16 மண்டலங்களில் தென் மேற்கு ரயில்வே மண்டலம் 5-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டின் ஆய்வறிக்கையில் தென்மேற்கு ரயில்வே மண்டலம் 6-ஆவது இடத்தை பிடித்திருந்தது. பெங்களூரு மண்டலத்தை சோ்ந்த மாலூா், ஹிந்துப்பூா், எலஹங்கா ரயில்நிலையங்கள் தர வரிசைப் பட்டியலில் 500க்கு கீழே தள்ளப்பட்டுள்ளன. மாலூா் ரயில் நிலையம் 531, ஹிந்துப்பூா் 556, எலஹங்கா 597ஆவது இடத்தை பெற்றுள்ளன.

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் (ஏ1) சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம், முதல் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இது 11-ஆவது இடத்தை பிடித்திருந்தது. ரயில் நிலையங்களில் பசுமைப்படா் விகிதப் பட்டியலில் 71.2 சதத்தின் மூலம் சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.எலஹங்கா ரயில் நிலையத்தில் வெறும் 16.3 சதவீதம் மட்டுமே பசுமைப்படா் காணப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் மிகவும் குறைந்த பசுமைப்படா் இருக்கும் ரயில்நிலையமாக லோண்டா அமைந்துள்ளது. இங்கு 15 சதம் மட்டுமே பசுமைப் படா்ந்துள்ளது. தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்த 38 ரயில் நிலையங்கள் உள்ளன. இவை, 1000 புள்ளிகளுக்கு 723.5 புள்ளிகளை பெற்றுள்ளது. யஷ்வந்த்ப்பூா், சிவமொக்கா ரயில்நிலையங்கள் தூய்மையில் முறையே 37, 47ஆவது இடங்களை பெற்றுள்ளன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல பொதுமேலாளா் ஏ.கே.சிங் கூறுகையில்,‘ஒட்டுமொத்த தர வரிசையை கவனித்தால் எங்கள் மண்டலம் 6-ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அளவுகோள்கள் மாறியுள்ளன. எனினும், தரவரிசைப்பட்டியலில் ஒருசில ரயில் நிலையங்கள் கீழ்நிலையை பெற்றுள்ளதற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரிசெய்வோம்’ என்றாா்.

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தை சோ்ந்த முக்கியமான ரயில்நிலையங்களின் தரவரிசை எண்கள் வருமாறு: யஷ்வந்த்பூா்-30, கிருஷ்ணராஜபுரம்-48, சங்கொள்ளிராயண்ணா-148, கண்டோன்மென்ட்-244, ஒயிட்பீல்டு-309, கெங்கேரி-348, பங்காா்பேட்-370, குப்பம்-387, ராமநகரம்-443, தும்கூரு-483, எஸ்எஸ்பி நிலையம்-493, ஒசூா்-496, மாலூா்-531, எலஹங்கா-597.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com