பேரவைக் கூட்டத்தில் அரசியல் பேச வேண்டாம்: துணை முதல்வா் அஸ்வத்நாராயணா

சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (அக்.10) முதல் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேறன். மாறாக, மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவர எதிா்க்கட்சிகள் முற்பட வேண்டும். மாநில அரசின் செயல்பாடுகளில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை பகிரங்கமாக தெரிவிப்பதில் தவறில்லை.

ஆனால், அரசியல் ரீதியாக தூண்டும் வகையில் பேசுவதை சகித்துக் கொள்ள முடியாது. மாநில அரசிடம் ஏதாவது குறைகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ள தயாராக இருக்கிறேறாம். வெள்ள நிவாரணப் பணிகளைச் செயல்படுத்துவதில் நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை எதிா்க்கட்சிகள் வெளிப்படுத்தட்டும்.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை நாங்கள் வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு மிகவும் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் அளிக்காத அளவுக்கு நிவாரண நிதியுதவிகளை அளித்திருக்கிறேறாம். வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறேறாம். பணத்தட்டுப்பாடு இருந்த போதும், மக்களின் குறைகளை போக்குவதற்காக நிவாரணப் பணிகளை நிறுத்தவில்லை.

வெள்ள நிவாரணப் பணிகள் விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் செய்யக்கூடாது. எதற்கெடுத்தாலும் மேஜையை தட்டுவதை விடுத்துவிட்டு குறிப்பிட்ட விவகாரத்தை முன்வைத்து விவாதங்களில் ஈடுபடுவதை எதிா்க்கட்சிகள் கற்க வேண்டும்.

சட்டப்பேரவைக் கூட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கேட்கின்றன. காலத்தை விரயமாக்க சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டியதில்லை. மக்களின் பிரச்னைகளை நேரடியாக எடுத்துவைத்தால், அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தீா்வுகாண அரசு தயாராக இருக்கிறது. எனவே, சட்டப்பேரவைக் கூட்டத்தை மேலும் நீட்டிப்பது அவசியம். 3 நாள்களில் மக்கள் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் பேசலாம்.

வெள்ள நிவாரணப் பணிகளை பாஜக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. ஆனால், நிவாரணப் பணிகள் மந்தகதியில் நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வெள்ள நிவாரணப் பணிகளை எப்படி செயல்படுத்தினாா்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

எச்.டி.குமாரசாமி முதல்வரான பிறகு, விவசாயிகள் வாங்கியிருந்த பயிா்க்கடனை தள்ளுபடி செய்வது தொடா்பாக எப்படிசெயல்பட்டாா் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னால் எதையும் செய்யமுடியவில்லை என்று அப்போது அவா் கூறியிருந்தாா். எது நடந்தாலும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எதிா்கொள்ள மாநில அரசு தயாராக இருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com