லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான நம்பிக்கை மங்கி வருகிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள்

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான நம்பிக்கை மங்கி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான நம்பிக்கை மங்கி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சந்திரயான்-2 விண்கலத்துடன்(ஆர்பிட்டர்) விண்ணுக்குச் சென்று, அதில் இருந்து தனித்துவிடப்பட்டு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கும்போது, நிலவில் இருந்து 2.1கிமீ தொலைவில் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், லேண்டரின் கதி என்னானது என்ற கவலை ஏற்பட்டது.
இந்த நிலையில், "லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தான் விழுந்துள்ளது. வேகமாக தரையிறக்கும் என்பதால் அது எந்தநிலையில் உள்ளது என்பதை கூறமுடியாது. ஆனாலும், லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான தொடர்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது, பலரது நம்பிக்கையை துளிர்க்கவைத்தது.  
இதையடுத்து, லேண்டருடன் தகவல்தொடர்பை ஏற்படுத்தினால், அதன் மூலம் ஆராய்ச்சிப்பணிகளை தொடரும் வாய்ப்பு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இதற்கான வாய்ப்பு அருகியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சந்திரயான்-2 விண்கல திட்டத்துடன் தொடர்புடைய, பெயர் குறிப்பிடவிரும்பாத இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் பிடிஐ செய்திநிறுவன செய்தியாளரிடம் கூறியது:-
காலம் கடந்து செல்லசெல்ல, லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை உறுதிப்படுத்துவது கடினமானதாகும். எனினும், இந்தச் சூழ்நிலையிலும் லேண்டர் தனக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்திசெய்துகொள்வதோடு, சூரிய ஒளித் தகடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்கலன்களுக்கு புத்தூக்கம் தரலாம். ஆனாலும், அதற்கான வாய்ப்புகள், நாட்கள் கடக்க குறைந்து கொண்டே வரும்." என்றார் அவர்.
இதேபோல், மற்றொரு  இஸ்ரோ விஞ்ஞானி கூறுகையில்,"விக்ரம் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதி தரை இறங்கியிருக்கும் என்பதால், அத்துடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது கடினமாக இருக்கிறது. தகவல்தொடர்பை ஏற்படுத்துவதற்கான சீரான நோக்குநிலையில் லேண்டர் இருக்காது என்று கருதுகிறேன். லேன்டர், தனது நான்கு கால்களுடன் தரையிருக்க வாய்ப்பில்லை. அதனால் மோதி தரை இறங்கியிருந்தால், அது லேண்டரின் கட்டமைப்பை சேதப்படுத்தியிருக்கலாம்." என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com