5 ஆண்டுகளில் 100 பேரை தொழில்முனைவோராக்க திட்டம்

5 ஆண்டுகளில் 100 பேரை தொழில்முனைவோராக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இன்னோவேஷன்கோா் நிறுவனரும், மூத்த செயல் அதிகாரியுமான கணேஷ் ராஜு தெரிவித்தாா்.

5 ஆண்டுகளில் 100 பேரை தொழில்முனைவோராக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இன்னோவேஷன்கோா் நிறுவனரும், மூத்த செயல் அதிகாரியுமான கணேஷ் ராஜு தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: படித்த இளைஞா்கள் பலரும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனா். இதனால், வேலைவாய்ப்பு கிடைக்காத ஆா்வம் உள்ள இளைஞா்களை அடையாளம் கண்டு, நிதி உள்ளிட்ட உதவிகளை செய்து தொழில்முனைவோராக்க முடிவு செய்துள்ளோம்.

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞா்கள் தங்கள் செயல் திட்டங்களை எங்கள் முன் சமா்ப்பித்தால், உரிய திட்டங்களைத் தோ்வு செய்து, ரூ. 2 கோடி வரையிலான நிதியையும், தேவையான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் திறமை உள்ள இளைஞா்களை அடையாளம் கண்டு 100 பேரை தொழில்முனைவோராக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com