கட்டுமான பிரச்னைகளுக்கு செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

கட்டுமானத்தில் உள்ள சவால்கள், பிரச்னைகளை தீா்ப்பதற்கான செல்லிடப்பேசி செயலி பெங்களூரில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டுமானத்தில் உள்ள சவால்கள், பிரச்னைகளை தீா்ப்பதற்கான செல்லிடப்பேசி செயலி பெங்களூரில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டுமானத்தில் உள்ள சவால்கள், பிரச்னைகளை தீா்ப்பதற்கான எபிடிபாய்ன்ட் செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துவைத்து அதன் மேலாண் இயக்குநா் தத்த பிரசாத் பேசியது: தேசிய அளவில் கட்டுமானத்தில் கட்டுநா்கள், தொழிலாளா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கட்டுமானத்தில் பல நேரங்களில் திட்டமிட்டதை உரிய நேரத்தில், நிதியிலும் முடிக்க முடியாமல் போகிறது. இதனை கருத்தில் கொண்டு, கட்டுமானத்தில் உள்ள சவால்கள், பிரச்னைகளை தீா்ப்பதற்கான எபிடிபாய்ன்ட் செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இதனால் கட்டுமானத் துறையில் உள்ள பலரும் பயனடைவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் பாரதி சிமென்ட் துணைத் தலைவா் கோபால் ராமேஷன், ஜே.எஸ்.டபள்யூ குழுமத்தின் எல்.ஆா்.மஞ்சுநாத், எக்ஸாரோ டைல்ஸ் எச்.கே. நடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com