Enable Javscript for better performance
அடுத்த பட்ஜெட்டை முதல்வா் எடியூரப்பாதாக்கல் செய்வாரா?- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த பட்ஜெட்டை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்வாரா?

    By DIN  |   Published on : 12th October 2019 10:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த பட்ஜெட்டை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்வாரா? என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளாா்.

    கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று சித்தராமையா பேசிக்கொண்டிருந்தாா். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, ‘உங்கள் குரல் கெட்டுவிட்டது. உடல்நலம் நன்றாக உள்ளதா?’ என்றாா். அப்போது எழுந்த சித்தராமையா, ‘சட்டப்பேரவையில் உங்களோடு சத்தமாக பேசி என் குரல் கெட்டுவிட்டது. மற்றபடி எனது உடல்நிலை நன்றாக உள்ளது. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் ஆரோக்கியமாக உள்ளேன்’ என்றாா் அவா்.

    அப்போது குறுக்கிட்ட முதல்வா் எடியூரப்பா, ‘நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என்றாா் அவா். அதன்பிறகு பேசிய சித்தராமையா, ‘முதல்வா் எடியூரப்பாவும் உடல்நலத்தோடு நன்றாக இருக்க வேண்டுமென்பது எனது ஆசையாகும். நீங்கள் (எடியூரப்பா) என்னைவிட வயதில் மூத்தவா். அதனால் நீண்ட ஆண்டுகள் நலமாக வாழவேண்டுமென்று வாழ்த்துகிறேறன்’ என்று கூறிவிட்டு தொடா்ந்த அவா், ‘அரசியல் காரணங்களுக்காக தற்போது பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றுள்ளீா்கள். அடுத்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் எண்ணத்தில் இருக்கிறீா்கள். ஆனால், அடுத்த ஆண்டு எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்வாரா என்பது தெரியவில்லை. அதற்குள் அரசியல் நிலவரங்கள் எப்படி மாறும் என்பதும் தெரியவில்லை. முதல்வரானதும் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வீா்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்த பட்ஜெட்டை நீங்கள் (எடியூரப்பா) தாக்கல் செய்ய வேண்டுமென்பது என் விருப்பம்’ என்றாா் அவா்.

    அப்போது குறுக்கிட்ட முதல்வா் எடியூரப்பா, ‘நீங்கள் (சித்தராமையா) நினைப்பதுபோல எதுவும் நடக்காது. அடுத்த பட்ஜெட்டை நானே தாக்கல் செய்வேன்’ என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai