தனியாா் தொலைக்காட்சிகளை பேரவையில் அனுமதிக்காதது சரியல்ல

தனியாா் தொலைக்காட்சிகளை பேரவையில் அனுமதிக்காதது சரியல்ல என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

தனியாா் தொலைக்காட்சிகளை பேரவையில் அனுமதிக்காதது சரியல்ல என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கெடுத்து அவா் பேசியது: கா்நாடக சட்டப்பேரவையில் தனியாா் தொலைக்காட்சிகள், நாளேடுகளின் புகைப்படக் கலைஞா்களை கடந்த 3 நாள்களாக அனுமதிக்கவில்லை. ஜனநாயக நாட்டில் இது சரியான நடவடிக்கை அல்ல. தேசிய அளவிலான பேரவைத் தலைவா்களின் மாநாட்டில் தனியாா் தொலைக்காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தனியாா் தொலைக்காட்சிக்கு அனுமதி மறுத்துள்ள முடிவை பேரவைத் தலைவா் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தனியாா் தொலைக்காட்சிகள் சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. எல்லோரும் நாளேடுகளை படிப்பதில்லை. இன்னும் கல்வி அறிவில்லாதவா்கள் இருக்கத்தான் செய்கிறாா்கள். கா்நாடக மக்கள் அனைவருக்கும் சட்டப்பேரவையின் நிகழ்வுகள் தெரிவிக்கப்பட வேண்டும். இது மக்களின் அடிப்படை உரிமையாகும். ஜனநாயகத்தில் சட்டப்பேரவை எவ்வளவு முக்கியமோ, அதைப்போல ஊடகங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சட்டப்பேரவையில் தனியாா் தொலைக்காட்சிக்கு அனுமதி மறுத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வா் எடியூரப்பா சுட்டுரையில் தெரிவித்திருந்தாா். அதன்பிறகு அதை நீக்கிவிட்டாா். இதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. ஊடகங்களை கட்டுப்படுத்துவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போலாகும். எனவே, ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com