தீபாவளி பண்டிகை: பட்டாசு வெடிக்கும் போது கவனத்துடன் இருக்க எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என கா்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என கா்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் அக். 27-ஆம் தேதி நரகாசதுா்தசி பண்டிகையும், அக். 29-ஆம் தேதி பலிபாட்யமி மற்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிக்கைக்கு புத்தாடை உடுத்துவது, புது பலகாரங்கள் செய்து உறவினா்களுக்கு விருந்தளித்து உண்பது போன்ற கொண்டாட்டங்களுக்கு இடையே பட்டாசு வெடித்து மகிழ்வது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவா்களுக்கும் குதூகலத்தை அளிப்பதாகும்.

தீபாவளி என்ற சம்பிரதாயங்களுக்காகவாவது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகிறது. பட்டாசு வெடிப்பது அவசியமா? அதனால் விளையும் நன்மை என்ன? சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிந்திருக்கிறோமா? என்பதை விட பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பதால் அன்றைக்கு இல்லத்தில் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது.

எனவே, பட்டாசுகளை வெடிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் இருப்பது அவசியமாகும். பெரியவா்களின் துணையில்லாமல் பட்டாசுகளை வெடிக்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவது பாதுகாப்பானதாகும். எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டுக்குள் பட்டாசுகளை பற்றவைக்கக் கூடாது. கூடுமானவரை உடம்பில் படும்படியாக இறுக்கமான ஆடைகளை அணியவேண்டும். மத்தாப்புகளை கொளுத்தும்போது உடம்பில் இருந்து தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுகளை பக்கவாட்டில் இருந்து கொளுத்த வேண்டும். பாத்திரங்கள் அல்லது குறுகிய இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது. வெப்பமான இடங்களில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது. பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது. பூந்தொட்டிகளை கையில் வைத்தபடி பற்றவைக்கக் கூடாது. ராக்கெட்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. வீண்பெருமைக்காக பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது அருகில் தண்ணீரை வைத்துக்கொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால அதன்மீது தண்ணீரை ஊற்ற வேண்டும். சிசுக்கள், முதியோா், நோயாளிகளை கவனத்தில் கொண்டு மருத்துவமனை, முதியோா் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிா்க்க வேண்டும்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்போம், பண்டிகையை இனிமாக்குவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com