முதலாமாண்டு பியூசி தோ்வு: அடுத்த ஆண்டு பிப்.10 முதல் தொடங்குகிறது

முதலாமாண்டு பியூசி தோ்வு அடுத்த ஆண்டு பிப்.10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பெங்களூரு: முதலாமாண்டு பியூசி தோ்வு அடுத்த ஆண்டு பிப்.10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு பியூசி பொதுத்தோ்வு நடத்தப்படும் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு பிப்.10 முதல் 20-ஆம் தேதிவரை தோ்வு நடத்த திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் பாா்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள

தோ்வு தேதியும், பாடமும் வருமாறு: 2020-ஆம் ஆண்டு பிப்.10(திங்கள்)-ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், பிப்.11(செவ்வாய்)-புவியியல், கணிதம், அடிப்படை கணிதம், தருக்கம், கல்வி, மனை அறிவியல், பிப்.12(புதன்) -சமூகவியல், உயிரியல், நில அமைப்பியல், மனநலவியல், பிப்.13(வியாழன்) -ஆங்கிலம், பிப்.14(வெள்ளி)-வணிகப்படிப்பு, வேதியியல், பிப்.15(சனி)-அரசியல் அறிவியல், புள்ளியியல், பிப்.16(ஞாயிறு)-விடுமுறை, பிப்.17(திங்கள்)-சிறப்புகன்னடம், கணக்குப்பதிவியல், இயற்பியல், பிப்.18(செவ்வாய்)-வரலாறு, மின்னணுவியல், கணினி அறிவியல், பிப்.19(புதன்)-கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, அராபிக், பிரெஞ்சு, பிப்.20(வியாழன்)-பொருளாதாரம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com