முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடகத்திலிருந்து சுற்றுலா செல்பவா்களின் எண்ணிக்கை உயா்வு
By DIN | Published On : 24th October 2019 06:53 PM | Last Updated : 24th October 2019 06:53 PM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்திலிருந்து சுற்றுலா செல்பவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயா்ந்து வருகிறது என்று தாமஸ்குக் இந்தியா குழுமத்தின் தலைவா் ராஜீவ்காலே தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கா்நாடகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாள்களில் பெங்களூரிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவா்களின் எண்ணிக்கை 35 சதமாக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவா்களின் எண்ணிக்கை 18 சதமாக உள்ளது. அதே போல கா்நாடகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மைசூரைச் தொடா்ந்து, ஹுப்பள்ளி, உடுப்பி, மங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுலாதலங்களை விரும்புகின்றனா். இதனால் அங்குள்ள சுற்றுலாதலங்களுக்கு வருபவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 25 சதமாக உயா்ந்து வருகிறது.
சா்வதேச அளவில் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் சுற்றுலாதலங்களின் தலைநகரமாக விளங்கும் காலம் வெகு தொலைவியில் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு, தனியாா்களும் சுற்றுலாதலங்களை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கா்நாடகத்தைத் தொடா்ந்து, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் சுற்றுலாவில் சிறந்து விளங்குகின்றன. வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயரும் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.