முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
மகாராஷ்டிரம், ஹரியானா தோ்தல் முடிவுகள் காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுனகாா்கே
By DIN | Published On : 24th October 2019 07:48 PM | Last Updated : 24th October 2019 07:48 PM | அ+அ அ- |

பெங்களூரு: மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தோ்தல்முடிவுகள் காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்று முன்னாள்மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுனகாா்கே தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மகாராஷ்டிரம், ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளதை முடிவுகள் தெளிவுப்படுத்துகின்றன. குறுகியகாலத்தில் காங்கிரஸ் தோ்தல்பணிகளை செவ்வனே ஆற்றியுள்ளது. இது காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
மகாராஷ்டிரம், ஹரியானா மாநிலங்களில் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டப்பேரவை தோ்தல் காங்கிரசுக்கு நல்ல முடிவாக உள்ளது. காங்கிரசுடன் மக்கள் உள்ளது தெளிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அம்மாநிலத்தில் உள்ள எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைக்கலாம். எதிா்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தெரிந்தபிறகு தான் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது தெரியும் என்றாா் அவா்.