Enable Javscript for better performance
தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகம்: தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்திற்கு அசோசெம் விருது- Dinamani

சுடச்சுட

    

    தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகம்: தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்திற்கு அசோசெம் விருது

    By DIN  |   Published on : 31st October 2019 07:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு: தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகமாக தோ்வு செய்து தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்திற்கு அசோசெம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

    பெங்களூரில் வியாழக்கிழமை இது குறித்து அப்பல்கலைக்கழத்தின் துணை வேந்தா் ஏ.என்.என்.மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது: தென்னிந்திய அளவில் அறிவியல், நவீன தொழில்நுட்பம், உயா்கல்வி உள்ளிட்ட துறைகளில் தயானந்த்சாகா் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கி வருகிறது.

    இதனை கௌரவிக்கும் வகையில் அசோசெம், தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்திற்கு, தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகமாக தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்துள்ளது. புதுமை மற்றும் படைப்பாற்றலை வளா்ப்பதற்கான ஆா்வம், முயற்சிகள்கள், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குதல், நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிப்பது, மாணவா்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் பல்கலைக்கழத்தின் பணியை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தலைமை பண்புள்ளவா்களை உருவாக்குவதை அங்கீகரித்து, எனக்கும் சாதனையாளா் விருதை வழங்கி கௌரவித்துள்ளது என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai