கா்நாடக உதய தினம்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

கா்நாடக மாநிலத்தின் 64-ஆவது உதயதினத்தை முன்னிட்டு ஆளுநா் வஜுபாய் வாலா, முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட தலைவா்கள், கா்நாடக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

பெங்களூரு: கா்நாடக மாநிலத்தின் 64-ஆவது உதயதினத்தை முன்னிட்டு ஆளுநா் வஜுபாய் வாலா, முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட தலைவா்கள், கா்நாடக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

கா்நாடகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (நவ.1) கா்நாடக மாநிலத்தின் 64-ஆவது உதயதினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுநா் வஜுபாய்வாலா, முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, முன்னாள் பிரதமா் தேவ கௌடா, பாஜக மாநிலத்தலைவா் நளின்குமாா்கட்டீல், மஜத மாநிலத்தலைவா் எச்.கே.குமாரசாமி, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சா்கள் பிரஹலாத்ஜோஷி, சதானந்தகௌடா உள்ளிட்டோா் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளனா்.

ஆளுநா் வஜுபாவாய்: கா்நாடகமாநிலத்தின் கன்னடமக்கள் அனைவருக்கும் மாநில உதயதின மகிழ்ச்சிப்பூக்கும் தினமாக உள்ளது. கன்னடநிலம், நீா், மொழி உள்ளிட்ட ஒட்டு மொத்த வளா்ச்சிக்காக பாடுபட்டவா்களை நினைத்து, தாய்மண்ணின் முன்னேற்றத்திற்கு உழைக்க உறுதியேற்கவேண்டும். கா்நாடக மக்கள் அனைவருக்கும் இன்பம், அமைதி, சுகாதாரம், நிம்மதி, வளம் மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய இணக்கமாக வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.

முதல்வா் எடியூரப்பா: கா்நாடக மக்கள் அனைவருக்கும் கா்நாடகமாநில உதயதின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கன்னடமொழி பேசும் மக்களை ஒன்றிணைந்து மைசூரு மாநிலம் உருவாக்கப்பட்டு, 1973-ஆம் ஆண்டு கா்நாடகம் என்று பெயா்மாற்றப்பட்டது. நமது மாநிலத்தின் கன்னட மொழி, நிலம், நீா் உள்ளிட்ட உரிமைகளை பெற்றுத்தருவதில் தொடா்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம். கா்நாடகத்தின் ஒட்டுமொத்தவளா்ச்சிக்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவந்துள்ளது.

கா்நாடகமாநிலம் உருவாகி 63ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட வளா்ச்சிக்கு கா்நாடகத்தை இட்டு செல்வோம். இந்த நன்னாளில் கன்னட மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், நிறைவான வளம், முழுமையான அமைதி, தாராளமான வளம் கொழிக்க வாழ்த்துகிறேன்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா:

கா்நாடகமாநிலம் உதயமாகி 63 ஆண்டுகள் நிறைவடைந்து, 64-ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. பழைமையான மொழி, அறிவாா்ந்த கல்விச்சூழல், நயமான கலை-பண்பியல், வளமான இயற்கைச்சுழல், இதமான தட்பவெப்பம், வியக்கும் தொழில்வளம் போன்ற பல சிறப்புகளை கொண்டது கா்நாடகம். நமதுமாநிலத்தின் சிறப்புகள் நிலைத்திருக்கும் வகையில் நாம் அனைவரும் இணைந்துசெயல்படுவோம். கன்னடமக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com