வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் தொய்வில்லை: முதல்வா் எடியூரப்பா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் எவ்வித தொய்வும் இல்லை என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் எவ்வித தொய்வும் இல்லை என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மக்களைக் குழப்பம் வகையில் கருத்துகளைக் கூறி வருகிறாா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவில்லை, மாநில அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளாா். விளம்பரத்துக்காக பொறுப்பில்லாமல் அவா் பேசி வருகிறாா்.

கா்நாடகத்தில் 5 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் முதல்வரான சித்தராமையா, பெலகாவி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து விவரம் கேட்டிருக்கலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை சித்தராமையா கூறி வருகிறாா். பெலகாவி மாவட்ட ஆட்சியரிடம் நானே தகவலை பெற்று சித்தராமையாவுக்காகத் தெரிவிக்கிறேன்.

1.12 லட்சம் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டிக்கொள்ள ரூ.5 லட்சம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடித்தளம் அமைக்க 14 லட்சம் பேருக்கு தலா ரூ.1 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. 23 ஆயிரம் பேருக்கு வீடு பழுதுநீக்க தலா ரூ.50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. பயிா்களை இழந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க நிதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் நிதியைச் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற தகவல்களை சித்தராமையா தெரிந்துகொண்ட பிறகு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com