சுடச்சுட

  

  பெங்களூரில் மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் லட்சுமண் சவதி தகவல்

  By DIN  |   Published on : 12th September 2019 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரில் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகத் துணை முதல்வர் லட்சுமண் சவதி தெரிவித்தார்.
   பெங்களூரில் போக்குவரத்து கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் புதன்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அவர் பேசியது:
   பெங்களூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியாரின் ஆதரவுடன் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். என்றாலும் அந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர்களை அரசுப் போக்குவரத்துக் கழகமே பணியில் சேர்க்கும்.
   இதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். அரசு போக்குவரத்துக் கழங்களில் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வழிகள் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுப் பேருந்துகளிலிருந்து அதிக அளவில் மாசு வெளியாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால், போக்குவரத்து கழங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் என்றார்.
   கூட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சிவயோகி கலசதா உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai