சுடச்சுட

  

  மத்திய அரசு வழங்கும் மூத்த குடிமக்கள் சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  இதுகுறித்து மாநில மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சமூகநலத் துறை சார்பில் 2019}20}ஆம் ஆண்டுக்கான மூத்த குடிமக்களுக்கு சாதனையாளர் விருதை மத்திய அரசு வழங்கவிருக்கிறது. சாதனையாளர்கள் தவிர, மூத்த குடிமக்கள் நலனுக்காக நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளை பெற மூத்த குடிமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். 
  2019}20}ஆம் ஆண்டுக்கான விருதுக்கு துறையின் துணை இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை செப்.14}ஆம் தேதிக்குள் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.socialjustice.nic.in என்ற இணையதளம், 080}22866066, 22866046 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai