சுடச்சுட

  

  அரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
   இதுகுறித்து பெங்களூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஒசூர் சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில்பயிற்சி மையத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடக்கவிருக்கிறது. கணினி நிரல் உதவியாளர், டிரெஸ் மேக்கிங், வெல்டர், டிராட்ஸ்மேன் சிவில், டிராட்ஸ்மேன் மெக்கானிக், தகவல்தொடர்பு தொழில்நுட்பம்-பராமரிப்பு, டூல் அண்ட் டை மேக்கர்(ஜிக்ஸ் அண்ட் ஃபிக்ஷர்ஸ்), டர்னர் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓராண்டு பயிற்சிக்கு ரூ.1500, ஈராண்டு பயிற்சிக்கு ரூ.1750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
   இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான மாணவர்கள் செப்.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
   இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 080 - 26562307 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai