சுடச்சுட

    

    "தண்ணீர் சேமிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

    By DIN  |   Published on : 13th September 2019 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்ணீரை சேமிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் தேசியத் தலைவர் குருமித்சிங் அரோரா தெரிவித்தார்.
     பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் 26ஆவது மாநாடு அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருவதால், காவிரி நீரையை எதிர்ப்பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்தால் காவிரியிலிருந்து வரும் தண்ணீர் குறைவதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
     எனவே, பெங்களூரு உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மழை நீர், தண்ணீரை சேமிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைநீரை சேமிப்பது மட்டுமின்றி, பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து, மரம், செடிக்களுக்கு பாய்ச்சவும், வீடு, வாகனங்கள் உள்ளிட்டவையை கழுவுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
     தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் அதனை உற்பத்தி செய்ய முடியாது என்பதனை அனைவரும் உணரவேண்டும். பெங்களூரு அரண்மனைத் திடலில் அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் மாநாடு நடைபெறும். அதில் கட்டடங்களில் அமைக்கப்படும் குழாய்களில் தண்ணீர் கசியாமல் இருப்பது குறித்தும், தண்ணீர் சேமிப்பு குறித்து விவாதிக்கப்படும். அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் குழாய்கள் அமைப்பது குறித்தும், கட்டுமானங்கள் குறித்து கிரடாய் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம் என்றார்.
     நிகழ்ச்சியில் இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் தேசியச் செயலாளர் சி.எஸ்.குப்தா, பெங்களூரு கிளையின் தலைவர் பிரசன்னக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai