சுடச்சுட

  

  48 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம்

  By DIN  |   Published on : 13th September 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் அடுத்த 48மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் வட கர்நாடகத்தின் உள்பகுதியில் பலவீனமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடலோர கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தென்கர்நாடகத்தின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்ய காரணமாக இருந்தது.
   தென் கன்னட மாவட்டத்தின் புத்தூர், குடகு மாவட்டத்தின் பாகமண்டலா, மடிக்கேரியில் தலா 40 மி.மீ, மணி, மூடபிதரி, குந்தாபூர், கோட்டா, ஆகும்பே, மாடபுராவில் தலா 30மிமீ, சுப்பிரமணியா, மங்களூரு, கொல்லூர், கார்காலா, கார்வார், நஞ்சன்கூடு, அரசிகெரே, கம்மரடியில் தலா 20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
   வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும், தென்கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், வடகர்நாடகத்தின் ஒருசில பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
   பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 30 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai