பெங்களூரு தமிழ்ச் சங்க செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஊற்று இதழுக்கான செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஊற்று இதழுக்கான செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் வி.கே.ராஜசேகர் வெளியிட்ட அறிக்கை:
 பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக வெளியிடப்படும் ஊற்று மாத இதழ் அதன் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் அஞ்சல்வழியே அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுகள், அறிக்கைகள், செயல்பாடுகள், உறுப்பினர்களின் தகவல்கள், தமிழ், தமிழர்நலம் சார்ந்த தகவல்கள், அறிவியல் போன்ற பொதுத்தகவல்கள் இடம்பெறும் ஊற்று இதழ், உறுப்பினர்கள் மட்டுமல்லாது தமிழர்கள் அனைவரும் படித்து மகிழ்வதற்காக, காலத்திற்கேற்ப செல்லிடபேசியில் படிக்க வசதியாகவும் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.
 செப்டம்பர் மாதத்தில் இருந்து ஊற்று இதழை செல்லிடப்பேசி செயலி வழியாக படித்து மகிழலாம். முதலில், செல்லிடப்பேசியில் கூகுள் பிளே ஸ்டோர் (எர்ர்ஞ்ப்ங் டப்ஹஹ் நற்ர்ழ்ங்) சென்று ஊற்று செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு ஞர்ற்ழ்ன்--அல்ல் செயலியை பயன்படுத்தி ஊற்று இதழை படித்துமகிழலாம் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com