பெங்களூரு தமிழ்ச் சங்க வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் அரசு நிர்வாக அதிகாரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.அஸ்வத் வெளியிட்ட அறிக்கை: 2019ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கர்நாடக அரசு 
பிறப்பித்திருந்த ஆணையின்படி, கர்நாடக சங்கப்பதிவுச் சட்டம், 1960 மற்றும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சட்டவிதிகள் 5இன்படி, உறுப்பினர்கள் அளித்திருக்கும் உறுப்பினர் படிவங்களின் அடிப்படையில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் செப்.9ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் தகவலுக்காக வாக்காளர் பட்டியல் www.bangaloretamilsangam.org  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பார்வைக்காக பெங்களூரு தமிழ்ச் சங்க அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் படிவங்களில் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண்படி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 
பெயர்களை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் ஏதாவது தவறிருந்தால், அதை உரிய ஆவணங்களுடன் சங்க அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதேபோல, பட்டியலில் இறந்தவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தால், அதுகுறித்தும் உரிய ஆவணங்களுடன் சங்க அலுவலகத்துக்கு தகவல் அளிக்க கேட்டுக் கொள்கிறோம். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட (செப்.9) தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் ஆட்சேபணைகளை தெரிவிக்க தவறினால், வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதாக கருதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com