ஜவஹார்லால் நேரு கோளரங்கத்தில் நாளை அறிவியல் திரைப்படம்

பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் செப்.15ஆம் தேதி அறிவியல் திரைப்படம் திரையிடவிருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் செப்.15ஆம் தேதி அறிவியல் திரைப்படம் திரையிடவிருக்கிறது.
இதுகுறித்து கோளரங்க நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ்  டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் செப்.15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிவியல் திரைப்படம் திரையிடப்படுகிறது. இத்திரைப்படம் 60 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். அறிவியல் திரைப்படத்தை காண முன்பதிவு
செய்ய வேண்டியது அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு- எத்தியோப்பியா இடையே விமான சேவை
பெங்களூரு, செப். 13:  பெங்களூரு-எத்தியோப்பியா நாட்டின் அட்டீஸ் அபேபா நகரிடையே இடையே விமான சேவை தொடங்க உள்ளது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை எதோப்பியா விமான சேவை நிறுவனத்தின் இந்திய துணை கண்டத்தின் மண்டல இயக்குநர் தடசே திலஹன் செய்தியாளர்களிடம் கூறியது: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எதோப்பியா, மும்பை, தில்லி இடையே ஏற்கெனவே விமான சேவை உள்ள நிலையில், தென் இந்தியாவில் முதன் முறையாக பெங்களூரு-எத்தியோப்பியா நாட்டின் அட்டீஸ் அபேபா
(ஹக்க்ண்ள் ஹக்ஷங்க்ஷஹ) நகரிடையே இடையே விமான சேவை தொடங்க உள்ளது. பெங்களூரைத் தொடர்ந்து, அகமதாபாத், சென்னை ஆகிய நகரங்களுக்கு பயணிகள் சேவை மட்டுமின்றி, சரக்கு சேவையும் தொடங்கப்படும். அக். 27ஆம் தேதி முதல் செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விமான எண் இ.டி 0690 பெங்களூரில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணியளவில் அட்டீஸ் அபேபாவை சென்றடையும். இதேபோல மறு மார்க்கத்தில் விமான எண், இ.டி 0691 அட்டீஸ் அபேபாவில் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.35 மணிக்கு பெங்களூரை வந்தடையும். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த சேவையை எதோப்பியா விமான சேவை நிறுவனம் தொடங்க
உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com