பைந்தூர் ரயில் நிலையத்தில் பூர்ணா ரயில் நின்று செல்லும்
By DIN | Published On : 19th September 2019 09:27 AM | Last Updated : 19th September 2019 09:27 AM | அ+அ அ- |

அடுத்த அறிவிப்பு வரும் வரை பைந்தூர் ரயில் நிலையத்தில் எர்ணாகுளம்-புணே இடையேயான பூர்ணா வாராந்திர ரயில் நின்று செல்லும் என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: எர்ணாகுளம்-புணே பூர்ணா வாராந்திர ரயில் எண் 11097/11098, இரு மார்க்கத்திலும் மூகாம்பிகை சாலை பைந்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்வது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.