Enable Javscript for better performance
டி20 கிரிக்கெட் போட்டி: இன்று நள்ளிரவு வரைமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டி20 கிரிக்கெட் போட்டி: இன்று நள்ளிரவு வரைமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

    By DIN  |   Published on : 22nd September 2019 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பெங்களூரில் நடக்க இருக்கும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் போது, மெட்ரோ ரயில்சேவையை நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்க பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் முடிவுசெய்துள்ளது.
    இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் செப். 22-ஆம் தேதி டி20 கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த போட்டிகளின் போது, மைசூரு சாலை முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில்சேவையை நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    இந்த நேரத்தில், 20 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இரவு 10 மணிக்கு மேல் டோக்கன்களுக்கு பதிலாக காகிதத்தில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டு விநியோகிக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.50 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai